
ஒரு இந்துப்பெண் இறந்துவிட்டால், அவளது சொத்து அவளது குழந்தைகளுக்கும் (ஆண், பெண்) கணவருக்கும் சேருகிறது. அந்தப் பெண் இறப்பதற்கு முன்னரே, அவரது மகன் உயிர் நீத்திருந்தால், பேரக்குழந்தைகள் அனைவருக்கும் சேர்த்து ஒரு சமபங்கு ஒதுக்கப்படுகிறது.முஸ்லீம்களது சொத்து வாரிசுரிமைச் சட்டங்கள் சிக்கலானவை. ஷியாக்களுக்கும், சன்னிக்களுக்கும் வாரிசுரிமைகள் வேறுபடுகிறன. ஆனால் கீழ்கண்ட மூன்று பொதுவான விதிகள் அனைவருக்கும் பொருந்தும்:-1. இறுதிச் சடங்குகளுக்குச் செலவினங்கள், கடன்கள் ஆகியவற்றை அடைத்த பின்னர், மீதியுள்ள சொத்தில் மூன்றில் ஒரு பங்கிற்குத்தான், உயில் எழுதி வைக்கமுடியும்.2. ஒரு ஆனுக்கு, பெண்ணைவிட இரண்டு மடங்கு சொத்துரிமை உண்டு.3. ஒரு பரம்ரையில் வந்த வாரிசுதாரர்கள் என்கிறபோது, நெருக்கமான மகளை எடுத்துக் கொண்டு,...